Saturday, 1 February 2014

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 20

மருது சகோதரர்களின் ஆக்க நிலையான அரசியல்நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கமற்றொன்றுகூட்டமைப்புகளை அவர்கள் பல்வேறு கூட்டமைப்புகளைகூட்டிணைவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில்ஈடுபட்டதாகும்கட்டபொம்மன் தலைமையிலான திருநெல்வேலிகூட்டிணைவு விருப்பாச்சிப்பாளைய மன்னர் கோபால நாயக்கர்தலைமையிலான திண்டுக்கல் கூட்டிணைவுகேரள வர்மன்தலைமையில் அமைந்த மலபார்க் கூட்டிணைவுதுந்தாஜிவாத்தலைமையிலமைந்த மராட்டியக் கூட்டிணைவுகானிஜகான்தலைமையிலமைந்த கோயம்புத்தூர் கூட்டிணைவு ஆகியஅனைத்தையும் ஒன்றாக இணைத்தனர்ஆங்கில ஆட்சிக்குஎதிராக ஒருமுகப்படுத்தினர்ஆனால் துரதிஷ்டமானஇக்கூட்டிணைவுகள் ஒருங்கிணைந்து செயலாற்றத் தொடங்கும்முன்னரே சில நசுக்கப்பட்டனசில ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால்கலைக்கப்பட்டனஇருப்பினும் மருது சகோதரர்கள் தங்களின்நோக்கத்திலிருந்து சிறிதும் மனம் தளரவில்லைஆங்கிலேயரைஎதிர்த்து அவர்களுக்குள்ள நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர்.ஆங்கிலேய மேலாண்மை எதிர்ப்புப் போர் அவர்களின் துணிவு,அரசியல் செயல்திறம் ஆகியவற்றிற்குச் சான்று பகர்வனவாகத்திகழ்கின்றன.கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருதுசகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி தம் சொந்தக் கருத்தைக்கூறுகிறார்சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்றுசிறுவயலில் வெ ள்ளை மருதுவின் அரண்மனையில்விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரதுஎதிரியாக மீண்டும் வருவேன் என்பதை நான் சிறிதளவுகூடஅறியாததேயாகும்பாஞ்சாலங்குறிச்சி வேறு வழியின்றி ஆயுதம்ஏந்தியுள்ளனர்ஆனால் எனக்குத் தெரிந்த அளவில் மருதுவிற்குதீர்த்து வைக்க முடியாதபடி எந்தக் குறையுமில்லைஅவர்செய்யும் இந்த கலவரம் தேவையில்லாததாகும்மருதுவைமதிக்கும் அளவிற்கு ஊமத்துரையை நான் மதிக்க முடியாது எனஇதிலிருந்து நாம் அறிவது மருதுவிற்கு ஐரோப்பிய நண்பர்கள்இருந்தனர் என்பது உண்மைதான்
ஆனால் அதன் காரணமாகவே அவர்கள் ஆங்கிலேயரின்மேலாண்மையை ஏற்றுக் கொண்டனர் எனக் கருத இயலாது.தமதுபாளையத்தில் மட்டுமின்றித் தமிழகத்திலிருந்தே இன்னும்ஆழமாகக் குறிப்பிட வேண்டுமனால் இந்தியாவிலிருந்தே ஆங்கிலமேலாண்மையை முற்றிலும் அகற்றிவிட வேண்டும் என்றமுனைப்பில்தான் அவர்களில் ஒவ்வொரு செயற்பாடும் இருந்தது.மருதுவின் திருச்சி அறிக்கை உன்னிப்பாக கவனித்தால் அதன்உண்மை தெ ள்ளத்தெளிவாக நமக்குப் புரியும்திப்புசுல்தான்மறைவுக்குப் பிறகு சின்னப் பாண்டியரி;ன் விடுதலை வேட்கைகொழுந்துவிட்டு எறிந்ததுஆங்கில மேலாண்மையை அடியோடுஅகற்ற வேண்டுவதன் இன்றியமையாமையை அவ்வறிக்கையில்தெளிவாகச் சுட்டியிருந்தனர்எனவே ஜேம்ஸ் வேல்ஷ்குறிப்பிடுவதைப் போல் மருது சகோதரர்களுக்கு எவ்விதக்குறையும் இருந்ததில்லை என்பது அவர்களின் தனிப்பட்டவாழ்க்கையில் வேண்டுமாயின் ஒரு வேளை பொருந்தலாம்.ஆனால் பொது வாழ்க்கையில் - குறிப்பாக அரசியல் வாழ்க்கையில்பொருந்தாது.ஆங்கிலேயரின் தயவில் மருது சகேதாரர்களின் ஆட்சியைநிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு எத்தனையோவாய்ப்புகள் இருந்தனஆயினும் அவர்கள் எந்தச் சூழலிலும் தம்சொந்த நலனுக்காக ஆங்கிலேயரை நாடவில்லைவிடுதலைவேட்கையின் பொருட்டே ஆங்கிலேயரை எதிர்த்தனர்எனவேதான் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைத் தங்கள் சொந்தஎதிரியாகக் கருதாமல் இந்த நாட்டின் எதிரியாகக் கருதினர்.அன்னாளில் இத்தகைய அரசயில் நோக்கும் இலட்சியமும்பாளையத் தலைவர்களில் சிலரிடையே மட்டுமே இருந்தன.அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் முன்னிற்பவர்கள் மருதுசகோதரர்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை.ஆங்கிலேயருக்கு எதிரான மருது சகோதரர்களின் கிளர்ச்சிஅரசயில் சார்புடையோர் மட்டும் நடத்திய கிளர்ச்சியன்றுஅதுமக்கள் கிளர்ச்சியுமாகும்ஆங்கிலேயரின் ஆட்சியலும் ஆற்காட்டுநவாப்பின் நடவடிக்கையிலும் மக்கள் வெறுப்படைந்தனர்தடுக்கின்றர் என்பதை அறிந்து மருது சகோதரர்கள் அவர்களைஒன்று திரட்டி ஆங்கிலேயரை எதிர்க்கும் மாபெரும் மக்கள்ஆற்றலை உருவாக்கினர்அவர்கள் நடத்திய கிளர்ச்சியில்அனைத்துச் சாதியினரும்அனைத்துத் தொழில்புரிவோரும் கலந்துகொண்டனர்அந்தணர்சத்திரியர்வைசியர்சூத்திரர்இஸ்லாமியர்ஆகிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் ஐரோப்பியமேலாண்மையினின்றும் மீட்க வேண்டும் என்றும சின்ன மருது தம்திருச்சி அறிக்கையில் அறிவித்திருந்தார்அதற்கேற்ப மறவர்,நாடார்தோட்டியர்கள்ளர்மீனவர் எனப் பல சாதியினர்இக்கிளர்ச்சியில் பங்கேற்றனர்மன்னர்களும்குறுநிலத்தலைவர்களும் ஆட்சிபுரிந்த அக்காலத்தில் இத்தகைய வலுவானமக்கள் முன்னணியை மக்கள் ஆற்றலைத் திரட்டிய மருதுசகோதரர்களின் மக்களாட்சி பண்புசிறப்புக்குரியதாகும்.கிளர்ச்சியுடன் நடந்த போதிலும் அம்முயற்சிதோல்வியடைந்ததுஅதற்குப் பல காரணங்களைக் கூறலாம். 1) புதுக்கோட்டை அரசர்விஜயரகுநாதராயத் தொண்டைமானும் தஞ்சாவூர் மன்னரும்ஆங்கிலேயரை அதிகப்படியாக ஆதரித்துப் படையுதவியுள்படஅனைத்து உதவிகளையும் செய்தது. 2) விடுதலைப் போராட்டவீரர்களிடம் திட்டமிட்ட போர்ப் பயிற்சி இல்லாதது புதிய ரகஆயுதங்களை கையாளுதுவில் உள்ள தொய்வு. 3) எதிரியின்ஆற்றலை முறியடிக்கத் தகுந்த திட்டத்தைக் கூட்டணியில்வகுக்காதது. 4) அனைத்து கூட்டிணைவுகளும் அந்தந்த இடத்தில்ஒரே காலத்தில் கிளர்ச்சியைச் செய்யாததுஇக்காரணங்களால்ஆங்கிலேயர் கிளர்ச்சிகளை ஒவ்வோரிடமாக நசுக்கினர்இதனால்சிவகங்கைப் பாளையத்திலும் கிளர்ச்சி தோல்வியுற்றது.மருதுபாண்டியர்கள் மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்ததற்குப்பொருத்தமான காரணங்கள் எவையுமில்லைஆயினும் அவர்கள்சொல்லும் இரு காரணங்களுக்காகப் போர் தொடுத்தனர். 1)கட்டபொம்மு மறைந்த பிறகு குமாரசாமி எனற ஊமைத்துரைக்குசிவகங்கைப் பாளையத்தில் அடைக்கலம் கொடுத்தது. 2)சிவகங்கையின் உண்மையான குடிவழியை நிலைநிறுத்தவிரும்பியது.மருது சகோதரர்கள் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்தது தவறுஎன்றால் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குஉரிமையுடையவர் ஆற்காட்டு நவாபுமேயன்றி ஆங்கிலேயர்அல்லர்கி.பி. 1792இல் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும்இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்பாளையக்காரரிடம் மேலாண்மை செலுத்தும் உரிமையைப்பெற்றிருந்தனர்ஆனால் இந்த ஒப்பந்தம் ஆற்காட்டு நவாபுக்கும்ஆங்கிலேயரின் மேலாண்மையை நிலைநிறுத்தும் பொருட்டும்அவர்களுக்குள் செய்து கொண்ட தன்னல ஒப்பந்தமேயாகும்.பாளையக்காரர்களின் நலன்களை முன்னிறுத்து செய்துகொண்டஒப்பந்தமன்றுஎனவே அது எவ்வகையிலும் எந்தப்பாளையக்காரரையும் கட்டுப்படுத்தும் தகுதி பெற்றதன்றுஇந்தஒப்பந்தத்தில் ஆற்காட்டாருக்கே பின்பு உடன்பாடு இல்லாமல்போய்விட்டதுஆயினும் ஆற்காட்டு நவாபுடன் ஆங்கிலேயர்செய்து கொண்ட ஒப்பந்தத்தை முன்னிறுத்திப் பாளையக்காரர்களைஅடக்க முயன்றனர்மருது சகோதரர்களிடமும் இவ்வடக்குமுறையைத்தான் ஆங்கிலேயர்கள் கையாண்டனர்.ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்ததோ சிவகங்கைப்பாளையத்ததுக்குரிய நேர்குடி வழியினரை மன்னராக அமர்த்ததோமருது சகோதரர்கள் செய்த குற்றமாயின் அவை தொடர்பாகமுறையான விசாரணையை ஆற்காட்டு நவாபுவின் ஒப்புதலில்நடைபெற்றிருக்க வேண்டுமகாரணம் முத்துவடுகநாதர் 26-6-1772இல் இறந்த பிறகு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் கழித்துசிவகங்கையை மீட்ட பொழுது மருதுபாண்டியர்கள் அரும்பாடுபட்டு40,000 பக்கோடே பணத்தைக் கொடுத்து மீட்ட பொழுது இந்தகேள்விகளை எல்லாம் ஆற்காட்டாரும்ஆங்கிலேயரும் ஏன் கௌரிவல்லபரும் கேட்டிருக்க வேண்டும்அப்பொழுது எல்லாம்குடிவழியைக் கேட்காமல் இப்பொழுது கேட்பது மிகவும்வேதனையான நிகழ்வுமருது சகோதரர்களை கைது செய்தநிலையில் கூட அவர்களை எத்தகைய விசாரணைக்கும்உட்படுத்தவில்லைவிசாரணை நடத்தினால் சட்டப்படி குற்றம்சுமத்த இயலாது என்பதே இதற்குக் காரணம்ஆற்காட்டு நவாபும்புதுக்கோட்டை தொண்டைமானும் மருது சகோதரர்களை அடக்கவேண்டும் என்று ஆங்கிலேயரை வற்புறுத்தியதும்திருநெல்வேலிஆட்சித் தலைவர் லூசிங்டன் மருது சகோதரர்களின் செல்வாக்கைக்குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டதுமாகிய இரு அடிப்படைக்காரணங்களினாலேயே ஆங்கிலக் கம்பெனியார் போர் தொடுத்தனர்.ஆற்காட்டு நவாபு சிவகங்கையின் வலிமையைக் குறைப்பதற்குபலமுறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்முயற்சியில்தோல்வியடைந்தார்இதனால் காழ்ப்புணர்வு மேலிட்டு 1786லும்1788லும் கம்பெனியாருக்கு இரு கடிதங்களை எழுதினர்.சிவகங்கையின் மீது படையெடுக்க வேண்டுவதன் முக்கியத்தைஅதில் குறிப்பிட்டிருந்தார்அவ்வாறே புதுக்கோட்டைத்தொண்டைமானும் எல்லைத் தகராறு என்பதைக் காரணம் காட்டி1788லும் 1792லும் இருமுறை சிவகங்கைப் பாளையத்தின் மீதுபடையெடுத்தார்மருது சகோதரர்களுக்கு சிவகங்கைச் சீமையில்உள்ள மக்கள் செல்வாக்கினால் அவரின் முயற்சி தோல்வியுற்றது.இதனால் அவர் மீது வெறுப்பை வளர்த்திருந்தார்எனவே மருதுசகோதரர்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்ததுசிலரதுதூண்டுதலினாலும் விருப்பு வெறுப்புகளை நிறைவு செய்யும்பொருட்டே ஆகும்இவையன்றி வேறு ஒரு பொருத்தமான நோக்கம்எதுவுமில்லைமருது சகோதரர்களின் அரசியல் வளர்ச்சியையும்,எழுச்சியையும் கண்டு ஆங்கிலேயர் அச்சமும் பொறாமையும்கொண்டனர்அவர்கள் மருது சகோதரர்களின் குடும்பத்தினருக்குஅளித்த தண்டனையில் அவற்றைத் தணித்துக் கொண்டனர்சின்னமருதுவின் 15 வயதே நிரமபிய அவரின் மகன் துரைசாமி என்பவர்நீங்கலாக ஆண்கள் அனைவரையும் எந்த இடத்தில்பிடிபடுகிறார்களோ அதே இடத்தில் தூக்கிலிட்டனர்தாய் நாட்டின்விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் குடும்பத்தில் ஆண்கள்யாருமே மிஞ்சக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டஆங்கிலேயரின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாதகறையுடையதாகும்காரணங்களை ஆராயாமல்கிளர்ச்சிசெய்தவர்களையே விசாரணை இன்றி தூக்கிலிட்டது நாகரிகமற்றசெயலாகும்.மருது சகோதரர்கள் விடுதலைப் போரில் தோல்வி அடைந்தனர்.உண்மைதான் அவர்கள் அப்போரில் வெற்றி பெற்றிருந்தால்நாளடைவில் எல்லோரையும் போல் அவர்களின் பெயர் இப்பொழுதுஉள்ள சந்ததியினருக்கு தெரியாமல் அல்லவா போய் இருக்கும்.போரில் தோல்வி அடைந்தாலும் அவர்களின் வீரம் செறிந்தஇலட்சியமும்குறிக்கோளும் தோல்வியடையவில்லைஅவர்கள்தூக்கிலிடப்பட்டதன் பின்னர் 146 ஆண்டுகள் கழித்தே விடுதலைஇலட்சியம் நிறைவேறியதுநாடு ஆங்கிலேயரிடம் இருந்துவிடுதலை பெற்றதுஇத்தனை ஆண்டுகள் கழித்து அடைந்தவிடுதலையை அக்காலத்திலேயே எண்ணினர்எழுச்சியுடன்செயல்பட்டனர்அவர்களின் இன்னுயிர் ஈந்தனர்நாட்டுமக்கள்இவ்வாறு எண்ணிப் பார்க்கும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கைஅமைந்ததுதான் அவர்களுக்குரிய வரலாற்றுச் சிறப்பு.மருது சகோதரர்களைப் பற்றி வரலாற்று உரியவைகள் திட்டமிட்டுஅனைத்தையும் அழித்தாலும் அவர்கள் அறிவித்த திருச்சிஅறிக்கை ஒன்று மட்டும் அவர்களின் இலட்சியத்தை விளக்கப்போதுமானதாக அமைந்துள்ளதுஆங்கிலேயர்கள் சிலநிகழ்வுகளை பாதுகாத்து வைத்ததினால் ஓர் அளவாயினும் மருதுசகோதரர்களின் வீரத்தை எந்தவித சுய விளம்பரம் இன்றிஉண்மையை உரைப்பனவாக உள்ளனஆங்கிலேயர் ஆட்சிக்குப்பெரும் எதிரிகளாய் விளங்கிய ஐதர் அலி அவர் மகன் திப்புசுல்தான்ஆகியோர்கூட இத்தயை அறிக்கையை வெளியிடவில்லை.உண்மையில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்தப்பாளையக்காரரும்(கட்டபொம்மு உள்படஏன்எந்த இந்தியமன்னரும் இத்தகைய அறிக்கையை துணிச்சலுடன்வெளியிடவில்லைஇதன் மூலம் தனக்கும்தனது குடிகளுக்கும் பல இன்னல்கள் வரும்என்றும் சின்னப் பாண்டியர் செய்தார் என்றால் என்ன சொல்ல.குறிப்பிடத்தக்க இந்திய வரலாறு ஆவணங்களுள் ஒன்றாகஇவ்வறிக்கையைக் கொள்வது பொருத்தமுடையதாகும்ஆங்கிலமேலாண்மைக்கு எதிராக இந்திய மண்ணில் எழுந்த எழுத்துவடிவிலான முதல் அறிக்கை இதுவே என்பது வரலாற்றில் நிலைநிறுத்தப்பெறும்இத்தகைய புகழ்மிக்க ஆவணத்தை நிலைநிறுத்திதங்கள் இன்னுயிரையும் குடும்பத்தினரின் இன்னுயிரையும் பலிபீடத்தில் ஏற்றிக் கொண்ட மருது சகோதரர்களின் தியாகம்வரலாற்றில் என்றும் நின்று நீங்கா இடம் பெறும்.
'
வாழ்க மருதுபாண்டியர்களின் புகழ்
'
ஓங்குக அவர்களின் புகழ்
முற்றும்

No comments:

Post a Comment