Friday, 31 January 2014

மயிலப்பன் { சேர்வை }

மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரின் தளபதியாக இருந்தார். இவர் ‘மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் துவக்கத்தில் கம்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரை கைது செய்தனர். திருச்சிக் கோட்டையில் இருந்து முத்துராமலிங்க சேதுபதியை காவலர்களுக்கு தெரியாமல் தப்பிக்கவைக்க மயிலப்பன் சேர்வை முயன்றார்.
அத்திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களை சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார். அப்பொழுது நடைபெற்ற முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய வீரபுருசர் இவர்தான் .அப்பொழுது உள்ள காலகட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு முகவை மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கும் வைகை ஆற்று நீரின் சம்பந்தமாகவும் பல எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக அவ்வப்பொழுது பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற அச்சமயத்தில் மயிலப்பர் சேதுபதியின் அன்புக் கட்டுப்பாட்டிருந்ததினால் மருதுபாண்டியருக்கும் அவருக்கும் பகை உணர்வு இருந்தது.
காலப்போக்கில் மருதுபாண்டியரின் விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த பொழுது அவரின் உண்மையான குணத்தைப் புரிந்து அவரின் நோக்கத்தை திருச்சிக் கோட்டையில் கைதாகிய முத்துராமலிங்க சேதுபதியிடம் விபரம் சொல்லி மருதுபாண்டியரின் பால் உள்ள கசப்பான நிலையை மறையச் செய்தார். மயிலப்பர், சேதுபதி, மருதுபாண்டியர் இணைந்து செயல்பட்டனர்.
அதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமாயின் கமுதி கோட்டையைத் தகர்த்து அங்குள்ள போராளிகளை விடுதலை செய்ய மருதுபாண்டியர் கொடுத்துதவிய வீரர்கள் மற்றும் போர் ஆயுதங்கள், அந்நாளில் ஆங்கிலேயர்களுக்கு பல வழிகளில் கடுக்காய் கொடுத்த பெரிய போராளி வீரர்கள் இந்த ‘மயிலப்ப சேர்வை”, ‘நைனப்பன் சேர்வையும் பெரியமருதுவும்” நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மருதுபாண்டியர்களின் படையில் இருந்தார். அவரது வீரத்தையும், உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்.

No comments:

Post a Comment